ஆப்நகரம்

‘நமது தேவைக்கு மக்களிடம் வசூலிப்பது தவறு’: நடிகர் அஜீத்

‘நமக்கான தேவைகளுக்கு மக்களிடம் நிதி வசூலிப்பது’ தவறு என்று சுட்டிக்காட்டியுள்ளார் நடிகர் அஜீத்

Samayam Tamil 3 Apr 2016, 4:03 pm
‘நமக்கான தேவைகளுக்கு மக்களிடம் நிதி வசூலிப்பது’ தவறு என்று சுட்டிக்காட்டியுள்ளார் நடிகர் அஜீத்.
Samayam Tamil it is wrong to collect money from people for our use says ajith kumar
‘நமது தேவைக்கு மக்களிடம் வசூலிப்பது தவறு’: நடிகர் அஜீத்


ஆகையால் அவர் தென்னிந்திய நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளவில்லையாம். தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடிகர் அஜித் புறக்கணிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்திற்கான நிதி திரட்ட, இந்த மாதம் 17-ஆம் தேதி, சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில், நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன.

நடிகர்கள் அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, ரஜினிகாந்த், கமல் உள்ளிட்ட இந்திய திரை உலகின், ‘சூப்பர் ஸ்டார்’கள், நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்த நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் நடிகர் அஜீத் மட்டும் பங்கேற்க போவதில்லை என்ற தகவல் நடிகர் சங்க வட்டாரத்தை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து நடிகர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறுகையில், நடிகர் சங்க கடனை அடைக்க, சிங்கப்பூரில் நடந்த கலை நிகழ்ச்சியில் நடிகர் அஜீத்தை தவிர அனைவரும் பங்கேற்றனர். ‘நமக்கான தேவைகளுக்கு, மக்களிடம் நிதி வசூலிப்பது தவறு’ எனக்கூறிய நடிகர் அஜீத், நடிகர் சங்க முன்னாள் தலைவர் விஜயகாந்திடம், நடிகர் சங்க கடனுக்காக, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். நடிகர் சங்க தேர்தலில் ஓட்டு போட வராத நடிகர் அஜித், நட்சத்திர கிரிக்கெட் போட்டியிலும் கலந்து கொள்ள போவதில்லை என்பது உறுதியாகி உள்ளது. வீண் பேச்சை விரும்பாத அஜீத், கண்டிப்பாக சங்க கட்டடத்திற்கு நிதி வழங்குவார்’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்