ஆப்நகரம்

2.0 ஷூட்டிங் முடிஞ்சிருச்சு: லண்டன் பறந்த எமி

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் 2.0.

TNN 6 Mar 2017, 12:06 pm
ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாகவும், எமி ஜாக்சன் அவருக்கு ஜோடியாகவும், பாலிவுட் ஸ்டார் அக்ஷய் குமார் வில்லனாகவும் நடிக்கின்றனர். லைகா புரோடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
Samayam Tamil its a wrap for me on robot 2 0 says amy jackson
2.0 ஷூட்டிங் முடிஞ்சிருச்சு: லண்டன் பறந்த எமி


சென்னையில் பிரமாண்ட செட் அமைத்து நடந்து வந்த நிலையில், எமி ஜாக்சன் நடிக்கும் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளது. இதனை எமி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்று காலை லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார்.
It's a WRAP for me on Robot 2.0!! https://t.co/2m3uhBmTGc — Amy Jackson (@iamAmyJackson) March 5, 2017 இதுபற்றி எமி தரப்பில் கூறியிருப்பதாவது: 2.0 படத்தில் எமி ஜாக்சன் நடித்து வந்த காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். ஹாலிவுட் படத்தில் நடிக்க எமி ஒப்பந்தமாகி இருப்பதால், அவருடைய காட்சிகள் மட்டும் விரைவாக முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் எமி நடிக்கும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
It's a WRAP for me on Robot 2.0 says amy jackson

அடுத்த செய்தி

டிரெண்டிங்