ஆப்நகரம்

விஜய் சேதுபதி அப்படி கூறவே இல்லை! இணையத்தில் உலா வரும் போலியான ட்விட்

ஜோதிகாவுக்கு ஆதரவாக விஜய் சேதுபதி பேசியதாக போலியான ட்விட் ஒன்று வைரலாகி உள்ளது.

Samayam Tamil 25 Apr 2020, 9:24 am
நடிகர் விஜய் சேதுபதி மதம் மாறிவிட்டார் என சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் பரவியது. அப்போது "போய் வேலை இருந்தா பாருங்கடா" என ட்விட் செய்து பதிலடி கொடுத்தார் அவர்.
Samayam Tamil Vijay Sethupathi clarifies on Fake tweet


அதனை தொடர்ந்து மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் "மனிதனை காப்பாற்ற மனிதன் தான் வரணும், வானத்தில் இருந்து எதுவும் வராது" என கூறி தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதை மறைமுகமாக பதிவு செய்தார். மேலும் தன்னை பற்றி வதந்திகள் பரப்புபவர்களுக்கும் அவர் பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக நடிகை ஜோதிகா ஒரு விருது விழாவில் கோவில்கள் பற்றி பேசிய வீடியோ சர்ச்சையில் சிக்கி வருகிறது. கோவில்கள் அரண்மனை போல பராமரிக்கப்படுகிறது, ஆனால் மருத்துவமனை மிக மோசமான நிலைமையில் இருக்கிறது. கோவிலுக்கு உண்டியலில் பணம் போடுவது போல மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கும் செலவு செய்யுங்கள் என கேட்டிருந்தார் ஜோதிகா.

ஜோதிகாவின் இந்த கருத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் பலரும் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர். ஜோதிகாவுக்கு ஆதரவாக விஜய் சேதுபதி கருத்து தெரிவித்ததாக கூறி நேற்று முதல் ஒரு போலியான ட்விட் உலா வருகிறது.

"ஜோதிகா அவர்களின் துணிவான பேச்சுக்கு வாழ்த்துக்கள். அவர்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் சக நடிகனாக முதல் ஆளாக இருப்பேன். கோவில்கள் மருத்துவமனையாக மாறும் காலம் நெருங்கிவிட்டது" என அதில் விஜய் சேதுபதி கூறியது போல குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த ட்விட் முற்றிலும் போலியானது, அதை போட்டோஷாப் செய்து பரப்பியது யார் என்பது தெரியவில்லை என பிரபலங்கள் சிலர் விளக்கம் அளித்து வருகின்றனர்.

அது Fake என விஜய் சேதுபதி ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்