ஆப்நகரம்

உலகம் முழுவதும் வெளியாகும் விமலின் ‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’!

விமல் நடிப்பில் உருவாகி வரும் ‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாம்.

Samayam Tamil 5 Dec 2018, 6:09 pm
விமல் நடிப்பில் உருவாகி வரும் ‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாம்.
Samayam Tamil vimal


ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் விமல், ஆஷ்னா சவேரி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’. மேலும் படத்தில் ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் காவல்துறை அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.

இந்நிலையில் இந்தப் படம் உலகம் முழுவதும் உள்ள 500 தியேட்டர்களில் வரும் 7ம் தேதி வெளியாகிறது. இதுவரை விமலின் எந்த படமும் 500 திரையரங்களில் வெளியானதில்லையாம். கேரளாவில் 100 மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் வெளியாகிறதாம். முதல்முறையாக இந்த படம் 500 மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாவது சினிமா திரையுலகில் மிகவும் ஆச்சரியமாக பேசப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்