கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் படம் இன்று மதியம் 12.30 மணிக்கு நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் அது பற்றி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். நெட்ஃப்ளிக்ஸ் கணக்கு இல்லாதவர்களோ, தனுஷ் ரசிகர்கள் யாராவது உதவ முடியுமா என்று கேட்கிறார்கள். படம் ரிலீஸான கையோடு அது டெலிகிராம், தமிழ் ராக்கர்ஸில் வந்துவிட்டதா என்று பலரும் ட்வீட் செய்தார்கள்.
இந்நிலையில் ஜகமே தந்திரம் ரிலீஸான வேகத்தில் அதை ஆன்லைனில் ஹெச்.டி. தரத்தில் கசியவிட்டுவிட்டது தமிழ் ராக்கர்ஸ். எந்த படம் ரிலீஸானாலும் அதை ஆன்லைனில் கசியவிடுவதையே ஒரு வேலையாக வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.
படம் தியேட்டர்களில் அல்ல மாறாக ஓடிடியில் வெளியானாலும் அதை கசியவிட்டு வேடிக்கை பார்க்கிறது. கொரோனா பான்டமிக்கால் தனுஷ் படம் ஓடிடியில் வெளியாகியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
முன்னதாக அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்த கர்ணன் படம் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி ஹிட்டானது. ஜகமே தந்திரம் படம் தனுஷ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
ஜகமே தந்திரம் விமர்சனம்
அதே சமயம் படம் சுமாராக இருப்பதாக சினிமா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். படத்திற்கு பில்ட்அப் தான் பெரிதாக கொடுத்திருக்கிறார்கள். மற்றபடி ஒன்றும் இல்லை என்று விமர்சனம் எழுந்திருக்கிறது.