ஆப்நகரம்

அமாவாசை படத்திற்கு ‘ஏ’சான்றிதழ்!

ஜெய் ஆகாஷ் நடித்துள்ள ‘அமாவாசை’படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

TNN 28 Feb 2017, 6:29 pm
ஜெய் ஆகாஷ் நடித்துள்ள ‘அமாவாசை’படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
Samayam Tamil jai akash starrer amavasai gets a certificate
அமாவாசை படத்திற்கு ‘ஏ’சான்றிதழ்!


ராகேஷ் சவந்த் தயாரித்து இயக்கிய படம் ‘அமாவாசை’. இந்தப் படத்தில் ஜெய் ஆகாஷ் நடித்துள்ளார். தமிழில் இந்தப் படத்திற்கு ‘அமாவாசை’ என்றும் தெலுங்கில் ‘அமாவாசய்யா’ என்றும் பெயர் வைத்துள்ளனர்.

படத்திற்கு சையது அகமது இசையமைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, இந்த படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. படத்தில் இடம் பெற்றிருந்த ஆபாச பாடல் காட்சிகளை கண்டு தணிக்கை குழுவினர் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் தர முடியாது என்று கூறிவிட்டனர்.

பின்னர் தணிக்கை குழுவினர் கூறிய காட்சிகளை நீக்கிய பின்னர் தயாரிப்பு நிர்வாகம் மீண்டும் தணிக்கைக்கு அனுப்பியது. அதன் பிறகும் படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்தப் படத்தில் ஜெய் ஆகாஷ் ஜோடியாக 7 புதுமுக ஹீரோயின்கள் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படம் விரைவில் திரைக்கு வருகிறது.

Cinema: Jai Akash starrer Amavasai gets A certificate.

அடுத்த செய்தி

டிரெண்டிங்