ஆப்நகரம்

Breaking News : ஜெய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘பிரேக்கிங் நியூஸ்’!

பிரபல நடிகர் ஜெய், தற்போது ‘பிரேக்கிங் நியூஸ்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

Samayam Tamil 25 Feb 2019, 2:19 pm
‘பிரேக்கிங் நியூஸ்’ என்ற புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்தப் படத்தில் ஹீரோவாக நடிகர் ஜெய் நடிக்கிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான படங்கள் ‘கலகலப்பு 2’, மற்றும் ‘ஜருகண்டி’ ஆகியவை.
Samayam Tamil jai


தற்போது ஜெய் நடிக்கவுள்ள ‘பிரேக்கிங் நியூஸ்’ என்ற புதிய படத்தை ஆண்ட்ரோ பாண்டியன் என்பவர் இயக்கி வருகிறார். படத்தை ராகுல் பிலிம்ஸ் திருகடல் உதயம் தயாரித்து வருகிறது.

சமீபத்தில்தான் நடிகர் ஜெய் ‘பார்ட்டி’, ‘நீயா 2’ ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து முடிந்திருந்தார். இந்த இரு படங்களும் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது ‘பிரேக்கிங் நியூஸ்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இன்று முதல் நடித்து வருகிறார் நடிகர் ஜெய். இந்தப் புதிய படத்திற்கு விஷால் பீட்டர் இசையமைக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்