ஆப்நகரம்

சாதனை படைத்த ஜெய்யின் 'எண்ணித் துணிக' டீசர்: உற்சாகத்தில் படக்குழுவினர்!

ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள 'எண்ணித் துணிக' படத்தின் டீசர், யூடிப் தளத்தில் 1 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

Samayam Tamil 16 Sep 2021, 2:58 pm
விநாயகர் சதுர்த்தி அன்று வெளியான, ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள 'எண்ணித் துணிக' படத்தின் டீசர், யூடிப் தளத்தில் 1 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரவேற்பானது, ரசிகர்களிடையேயும், விநியோக தளத்திலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
Samayam Tamil எண்ணித் துணிக
எண்ணித் துணிக


நடிகர் ஜெய்யின் இணையற்ற நடிப்பு, இயக்குநர் வெற்றி செல்வனின் அற்புத உருவாக்கத்தில், 90 வினாடிகளில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்தியிருக்கும் நேர்த்தியான கதை, விழிகளை விரயச்செய்யும் தினேஷ் குமாரரின் ஒளிப்பதிவு, சாம் CS உடைய மனம் மயக்கும் பின்னணி இசை மற்றும் V.J.சாபு ஜோசப்பின் ஸ்டைலான எடிட்டிங் அனைத்தும் இணைந்த, இந்த டீசர் படத்தின் மீதும், கதையின் மீதும், ரசிகர்களிடம் பேரார்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது டீசருக்கு கிடைத்துள்ள இந்த மாபெரும் வரவேற்பின் மகிழ்ச்சியில், உற்சாகத்துடன் இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்து தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர். இந்தப்படத்தின் ஆடியோ உரிமையை திங் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. விரைவில் இந்தப்படத்தின் பாடல்கள் வெளியிடப்படும் என எதிரபார்க்கப்படுகிறது.

ஒரே ட்வீட்டால் தலைவர், தளபதி, தல ரசிகர்களை கவர்ந்த சுரேஷ் ரெய்னா!
ஜெய் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளனர். ரெய்ன் ஆஃப் ஏரோஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கியுள்ளார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட 'எண்ணித் துணிக' படத்தின் டீஸர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்று வருவது படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்