நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்திற்கு ஜெயிலர் என்று தலைப்பு வைத்து போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது சன் பிக்சர்ஸ். தலைப்பு மாஸாக இருக்கிறது என்று ஒரு சிலரும், வேற லெவலில் எதிர்பார்த்தோம் என சிலரும் தெரிவித்துள்ளனர். ஜெயிலர் படத்தின் ஸ்க்ரிப்ட் வேலையை இறுதி செய்ய பிரபல இயக்குநரான கே.எஸ். ரவிக்குமாரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ரவிக்குமாரை பரிந்துரை செய்ததே ரஜினி தான். முன்னதாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தை பார்த்த தளபதி ரசிகர்களே கடுப்பாகிவிட்டனர். எப்படி ஃபாஸ்டாக போக வேண்டிய படத்தை இப்படி சொதப்பிட்டீங்களே நெல்சன் என விஜய் ரசிகர்கள் புலம்பினார்கள், ஏன் திட்டவும் கூட செய்தார்கள்.
இதை எல்லாம் பார்த்து தான் தன் படத்திற்கும் அப்படி ஒரு நிலைமை வந்துவிடக் கூடாது என்று சுதாரித்து கே.எஸ். ரவிக்குமாரை அழைத்து வந்துவிட்டார் ரஜினி என்று கூறப்படுகிறது.
முன்னதாக விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விக்ரம் படத்தை எடுத்தார். விக்ரம் படத்தின் ஸ்க்ரிப்ட் விஷயத்தில் கமல் தலையிட்டு மாற்றம் செய்ததாக கூறப்பட்டது.
மாஸ்டர் படத்தின் ஹீரோ விஜய் என்றாலும், அது வில்லன் விஜய் சேதுபதியின் படம் என்று விமர்சனம் எழுந்தது. விக்ரமிலும் விஜய் சேதுபதி நடித்தார். விஜய்க்கு நடந்தது தனக்கும் நடந்துவிடாமல் இருக்கவே ஆண்டவர் ஸ்க்ரிப்ட் விஷயத்தில் தலையிட்டதாக அப்போது பேசப்பட்டது.