ஆப்நகரம்

Keerthy Suresh:கீர்த்தி சுரேஷை வரவேற்ற ஜான்வி கபூர்- எதற்கு தெரியுமா?

நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமாவதை வரவேற்கும் வகையில் நடிகை ஜான்வி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார் .

Samayam Tamil 14 Mar 2019, 2:50 pm
நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமாவதை வரவேற்கும் வகையில் நடிகை ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராமில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Samayam Tamil maxresdefault (1)


தமிழ்த் திரையுலகில் குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி ஹிரோக்களுடன் நடித்தவர் கீர்த்தி சுரேஷ் . சிவகார்த்திகேயன் முதல் விஜய் வரை அனைவருடனும் நடித்த இவர் தெங்கு, மலையாளம், தமிழ் என்ற மொழிகளில் தொடர்ந்து நடித்துவருகிறார்.

இவர் அதிகபடியான படங்கள் நடித்தாலும், சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மகாநதி படம்தான் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. அதுவரை ’கியூட் ஹீரோயின்’ என்று மட்டுமே அறியப்பட்டவர் , சிறந்த நடிகை என்று அங்கீகரிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவரது மார்கெட் உச்சத்தை எட்டியது. இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் நடிக்க உள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த திரைபடத்தில் நடிகர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக கீர்த்தி நடிக்கிறார்.

பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கும் கீர்த்தி சுரேஷை வாரவேற்கும் விதமாக ஸ்ரீதேவியின் மகள் மற்றும் நடிகையுமான ஜான்வி கபூர் இன்ஸ்டிராகிராமில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது ‘ நீங்கள் நடித்த மகாநதி படத்திலிருந்து உங்கள் நடிப்பை கண்டு வியந்து வருகிறேன். மேலும் எனது அப்பா தயாரிக்கும் படத்தில் நீங்களும் ஒரு அங்கம் என்பது எனது மகிழ்ச்சியை அதிகரித்துள்ளது. உங்கள் இந்தி திரைப்பட உலகிற்கு வரவேற்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்