ஆப்நகரம்

இனிமேல், ஆக்ஷன் ஹீரோயின் தான்: த்ரிஷா எடுத்த அதிரடி முடிவு!

எம். சரவணன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிகை த்ரிஷா, முழுக்க முழுக்க ஆக்ஷனில் களமிறங்கவுள்ளார்.

Samayam Tamil 5 Feb 2019, 8:25 pm
எம். சரவணன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிகை த்ரிஷா, முழுக்க முழுக்க ஆக்ஷனில் களமிறங்கவுள்ளார்.
Samayam Tamil tri


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவர் நடிக்க வந்து 15 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னும் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வெற்றிப் படம் ‘96’. அடுத்ததாக இவர் லைகா நிறுவனம் தயாரிக்கும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ‘எங்கேயும் எப்போதும், ‘இவன் வேற மாதிரிமற்றும் வல்லினம் போன்ற படங்களை இயக்கிய எம்.சரவணன் இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் த்ரிஷாவுக்கு ஜோடி இல்லை என்றும், முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் திரையுலகில் வெற்றிநடை போட்டுவரும் த்ரிஷா தற்போது ‘சதுரங்க வேட்டை 2’, ‘1818’, ‘பரமபத விளையாட்டு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்