ஆப்நகரம்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் தொடராக வருகிறது!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தற்போது வெப் தொடராக வெளியாகவுள்ளது.

Samayam Tamil 18 Dec 2018, 6:07 pm
சினிமாவிலும், அரசியலிலும் கொடிகட்டிப் பறந்தவர் ஜெயலலிதா. இவர் கடந்த ஆண்டு மறைந்தார். தற்போது இவரின் வாழ்க்கை வரலாற்றை பிரியதர்ஷினி ‘தி அயர்ன் லேடி’ என்ற பெயரில் படமாக்கி வருகிறார். ஜெயலலிதா கேரக்டரில் நடிகை நித்யா மேனன் நடித்து வருகிறார். அதேபோல் இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
Samayam Tamil gauthammenonwebseries


இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள செய்தியின்படி ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை வெப் தொடராக பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கவுள்ளாராம். 30 எபிசோட்களாக இந்த தொடர் உருவாகவிருப்பதாகவும், இந்த தொடர் ஒரு முன்னணி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த வெப் தொடரில் ஜெயலலிதா கேரக்டரில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கவிருப்பதாகவும், இந்த தொடரின் மற்ற முக்கிய கேரக்டர்களில் வினிதா, இந்திரஜித் ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும் தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்