ஆப்நகரம்

எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிக்கும் ஜெயலலிதா! - எப்போ எங்கே?

‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ என்ற அனிமேஷன் படத்தில் நடிகர் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக மீண்டும் ஜெயலலிதா நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 6 Apr 2018, 4:38 pm
‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ என்ற அனிமேஷன் படத்தில் நடிகர் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக மீண்டும் ஜெயலலிதா நடிக்கவுள்ளார்.
Samayam Tamil MGR


எம்.ஜி.ஆர். மஞ்சுளா, லதா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ . இந்தப் படத்தை எம்.ஜி.ஆர். இயக்கியிருந்தார். இந்தப் படத்தை அடுத்து அதேபோல் வெளிநாட்டு காட்சிகளுடன் படமாக்க திட்டமிட்டிருந்த படம் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’. ஆனால் எம்ஜிஆர் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் இந்த படம் எம்ஜிஆரின் நிறைவேறாத கனவாகிவிட்டது.

இதனால் எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமான நகைச்சுவை நடிகரும், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனருமான ஐசரிவேலனின் மகன் ஐசரிகணேஷ் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ அந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க அனிமேஷனில் எம்ஜிஆரின் காட்சிகள் நவீன தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா மீண்டும் நடிக்கிறார். இந்த ஜோடி ஏற்கனவே 28 படங்களில் சேர்ந்து நடித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்