ஆப்நகரம்

ஜெயம் ரவியின் 25வது பட டைட்டில் அறிவிப்பு வெளியானது!

ஜெயம் ரவியின் 25வது பட டைட்டில் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 12 Oct 2019, 9:12 am
ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான 'கோமாளி' படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று சூப்பர் ஹிட் அடித்தது. அதையொட்டி படக்குழு கேக் வெட்டி அதை சிறப்பாகக் கொண்டாடினர்.
Samayam Tamil 52400865


அதைத்தொடர்ந்து தற்போது ஜெயம் ரவி தனது 25வது படத்தில் நடிக்கிறார். ரோமியோ ஜூலியட், போகன் போன்ற படங்களை இயக்கிய லக்‌ஷ்மண் இப்படத்தை இயக்குகிறார். சுஜாதா விஜயகுமார் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதியின் சங்கத்தமிழின் படம் தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை! தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜெயம் ரவியின் 25வது படத்திற்குப் பூமி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படம் விவசாயம் பற்றிய திரைக்கதை என்பது குறிப்பிடத்தக்கது.

சதீஷ் பித்தலாட்டத்தை ஆதாரத்துடன் வெளியிட்ட ஆர்யா!

டி. இமான் இசையமைத்து வருகிறார். டட்லி ஒளிப்பதிவில் படம் தயாராகி வருகிறது. மூன்றாவது முறையாக இணைந்துள்ள லக்‌ஷ்மண்- ஜெயம் ரவி படம் மீது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


விரைவில் படத்தின் கூடுதல் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ஜெயம் ரவி படம் ஹிட் அடித்து வருவதால் பூமி படமும் கண்டிப்பாக வெற்றி பெரும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இது தவிர ஜெயம் ரவியின் 26வது படத்தை ‘ஜனகனமன’ பட இயக்குநர் அஹ்மது இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்