ஆப்நகரம்

இயக்குனர் ராஜிவ் மேனன் இயக்கத்தில் ஜெயம் ரவி!?

நடிகர் ஜெயம் ரவி, பிரபல இயக்குனர் ராஜிவ் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 5 Apr 2019, 7:23 pm
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக ஒரு நிலையான அந்தஸ்துக்கு வர போராடி வந்தவர் நடிகர் ஜெயம் ரவி. தற்போதுதான் அந்த அந்தஸ்து இவருக்கு கிடைத்துள்ளது. ‘தனி ஒருவன்’ படத்துக்குப் பின் இவருடைய சினிமா வாழ்க்கையே மாறிவிட்டது. அந்தளவுக்கு தற்போது வித்தியாசமான படங்களாகப் பார்த்து நடித்து வருகிறார்.
Samayam Tamil jayam-ravi


அந்தவகையில் அடுத்ததாக இவர் இயக்குநர் ராஜிவ் மேனன் இயக்கத்தில் ஒரு த்ரில்லர் படத்தில் நடிக்கபோவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து ராஜிவ் மேனனிடம் விசாரித்தபோது, இதை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார். அண்மையில் ‘சர்வம் தாள மயம்’ படத்தை பார்த்த ஜெயம்ரவி, தன்னை வாழ்த்தியதாகவும் இதை யாரோ மாற்றி கூறிவிட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

இயக்குனர் ராஜிவ் மேனன், பிரபுதேவா நடிப்பில் ‘மின்சார கனவு’, அஜித் நடிப்பில் ’கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்’ ஆகிய வெற்றி படங்களை இயக்கியுள்ளார். அண்மையில் இவர் ஜி.வி. பிரகாஷை வைத்து ‘சர்வம் தாள மயம்’ என்ற வெற்றிப் படத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்