ஆப்நகரம்

நல்ல பட வாய்ப்பை இழந்த ஜெயம் ரவி!

நல்ல பட வாய்ப்பை இழந்த ஜெயம் ரவி!

TOI Contributor 24 Feb 2017, 6:23 pm
‘எமன்’ படத்தில் முதலில் நடிக்க வந்த வாய்ப்பை இழந்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி.
Samayam Tamil jayam ravi missed wonderful movie opportunity
நல்ல பட வாய்ப்பை இழந்த ஜெயம் ரவி!


விஜய் ஆண்டனி நடிப்பில் ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவான படம் ‘எமன்’. இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது. சில நாட்களுகக்கு முன் திரையுலகப் பிரமுகர்கள் சிலருக்கு எமன் படத்தை திரையிட்டனர். படத்தைப் பார்த்த அனைவருமே விஜய் ஆண்டனியையும் இயக்குநர் ஜீவாசங்கரையும் பாராட்டினர்.

இயக்குனர் ஜீவா சங்கர் ‘எமன்’ படக்கதையை என்னிடம் தான் சொன்னார். நான் தான் இந்தப்படத்தை மிஸ் பண்ணிவிட்டேன் என்று நடிகர் விஜய் சேதுபதி பேசினார். உண்மையில் விஜய் சேதுபதியிடம் கதை சொல்வதற்கு முன், ஜீவாசங்கர், ‘தாம் தூம்’ படத்தை அடுத்து ஜெயம் ரவியிடம் கூறியிருக்கிறார்.

சுமார் இரண்டு வருடங்கள் காத்திருக்க வைத்துவிட்டு, கடைசியில் இந்தக்கதை என் அப்பாவுக்கும் அண்ணனுக்கும் பிடிக்கவில்லை. அதனால் என்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம் ஜெயம் ரவி. அப்ஸெட்டான ஜீவா சங்கர், பிறகு மனதை திடப்படுத்திக் கொண்டு வேறு ஹீரோவைத் தேடினார். அப்போதுதான் விஜய் சேதுபதியிடம் கூறியிருக்கிறார். அந்நேரத்தில் விஜய் சேதுபதியின் கால்ஷீட் பிரச்னையால் அந்தப் படம் கடைசயில் விஜய் ஆண்டனி பக்கம் சென்றதாம். ஆகையால் இந்தப் படத்தில் நடிக்க கொடுத்துக் வைக்கவில்லையே என்று ஜெயம்ரவி வருத்தப்பட்டாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்