ஆப்நகரம்

பாக்ஸ் ஆபீஸில் பட்டைய கிளப்பும் ஜெயம் ரவியின் டிக்:டிக்:டிக்!!

நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியாகி உள்ள ‘டிக்:டிக்:டிக்’ திரைப்படம், முதல் மூன்று நாட்களில் மட்டும் 12 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 26 Jun 2018, 12:06 pm
நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியாகி உள்ள ‘டிக்:டிக்:டிக்’ திரைப்படம், முதல் மூன்று நாட்களில் மட்டும் 12 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil பாக்ஸ் ஆபீஸில் பட்டைய கிளப்பும் ஜெயம் ரவியின் டிக்:டிக்:டிக்!!
பாக்ஸ் ஆபீஸில் பட்டைய கிளப்பும் ஜெயம் ரவியின் டிக்:டிக்:டிக்!!


நடிகர் ஜெயம் ரவி, மிருதன் பட இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படம் டிக்:டிக்:டிக். விண்வெளி சாகசப்படமாக உருவாகி உள்ள இப்படத்தில், நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதனிடையே, இந்தப் படம் முதல் நாளில் மட்டும், 7 கோடி வரை ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் மூன்று நாள் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் தற்போது வெளியாகி உள்ளது. சென்னையில் மட்டும் டிக்:டிக்:டிக் திரைப்படம் 1.83 கோடி ருபாய் வசூல் செய்து, இந்த வார சென்னை பாக்ஸ் ஆபீஸில் முதலிடம் பிடித்துள்ளது.

மேலும், இந்தத் திரைப்படம் கடந்த மூன்று நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தமாக, ரூ.12.28 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. இதுதவிர, உலக அளவில் இந்த படத்தின் கலெக்ஷனைச் சேர்த்தால், படத்தின் வசூல் 30 கோடி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்