ஆப்நகரம்

ஜீத்து ஜோசப் படத்தில் நடிக்கும் பிஜூமேனன்!

ஜீத்து ஜோசப்பின் இரண்டு படங்களில் பிஜூமேனன் நடிக்கிறார்.

TNN 29 Nov 2016, 4:43 pm
ஜீத்து ஜோசப்பின் இரண்டு படங்களில் பிஜூமேனன் நடிக்கிறார்.
Samayam Tamil jeethu joseph and biju menon joint a movie
ஜீத்து ஜோசப் படத்தில் நடிக்கும் பிஜூமேனன்!


இயக்குனர் ஜீத்து ஜோசப் மோகன்லால் மகன் பிரணவை வைத்து இயக்கும் படம் அடுத்த வருடத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்தநிலையில் ஜீத்து ஜோசப் அதற்குமுன்னதாக பிஜூமேனனை வைதது ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு ‘தஸ்கரன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் கதை இந்துகோபன் என்பவர் எழுதிய ‘தஸ்கரன்; ஒரு மனியம்பிள்ளயுடே ஆத்மகதா’ என்கிற புத்தகத்தை தழுவியது. இந்தக் கதையை ஜீத்து ஜோசப் படமாக இயக்கவுள்ளாராம். பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மிகப்பெரிய கொள்ளைக்காரனாக இருந்து, பின்னாளில் மக்களின் நலனுக்காக பாடுபட்ட மனியம்பிள்ள என்கிற கொள்ளைக்காரனை பற்றிய கதை என்று கூறப்படுகிறது.

தற்போது பிஜூமேனன் ‘லட்சியம்‘ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ‘தஸ்கரன்’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்த ‘லட்சியம்‘ படத்தை இயக்குனர் அஸார் கான் இயக்கினாலும் படத்தின் கதையை ஜீத்து ஜோசப் எழுதியுள்ளார். அந்தவகையில் பிஜூ மேனன் அடுத்தடுத்து ஜீத்து ஜோசப்பின் கதையில் நடிக்கும் பாக்கியசாலியாக உள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்