ஆப்நகரம்

கருணாஸ் வாய்ப்பு ஜீவாவுக்கு கைமாறியது!

அமீர் இயக்கத்தில் கருணாஸுக்கு வந்த ஹீரோ வாய்ப்பு கை நழுவி அது நடிகர் ஜீவாவுக்கு கைமாறியுள்ளது.

Samayam Tamil 13 Apr 2018, 5:30 pm
அமீர் இயக்கத்தில் கருணாஸுக்கு வந்த ஹீரோ வாய்ப்பு கை நழுவி அது நடிகர் ஜீவாவுக்கு கைமாறியுள்ளது.
Samayam Tamil ram-jeeva


நடிகர் ஜீவாவை வைத்து இயக்குனர் அமீர் இயக்கிய படம் ‘ராம்’. நடிகர் ஜீவா திரைப்பயணத்தில் யாராலும் மறக்க முடியாத படம் ‘ராம்’. இப்படத்திற்காக நடிகர் ஜீவாவுக்கு பல விருதுகள் கிடைத்தது. அதே நேரத்தில் இயக்குனர் அமீருக்கும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கும் இந்தப் படத்தின் மூலம் பல சர்வேதச விருதுகள் கிடைத்தது.

இந்தப் படத்தில்தான் நடிகர் கஞ்சா கருப்பு முதன் முறையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இந்த படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது கருணாஸ்தானாம். அவரை மனதில் வைத்துத்தான் இந்த கதையே எழுதப்பட்டதாம். அவரை வைத்து பல டெஸ்ட் ஷுட் முதற்கொண்டு முடித்துவிட்டாராம் அமீர். பிறகு ஒரு சில பிரச்சனையால் கருணாஸ் அப்படத்திலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஜீவா ஹீரோவாக நடித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்