ஆப்நகரம்

ஜியா கானின் மரணம் ஒரு தற்கொலை: சிபிஐ அறிக்கை

பாலிவுட் நடிகை ஜியா கானின் மரணம் ஒரு தற்கொலை, அதில் மறு விசாரணை தேவையில்லை என மும்பை நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு அறிக்கை சமர்பித்துள்ளது.

TNN 16 Jun 2016, 12:26 pm
மும்பை: பாலிவுட் நடிகை ஜியா கானின் மரணம் ஒரு தற்கொலை, அதில் மறு விசாரணை தேவையில்லை என மும்பை நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு அறிக்கை சமர்பித்துள்ளது.
Samayam Tamil jiah khans death was suicide no need to reinvestigate cbi
ஜியா கானின் மரணம் ஒரு தற்கொலை: சிபிஐ அறிக்கை


ஜியாகானின் தாய் ராபிய கான், இவ்வழக்கில் சிறப்பு புலனாய்வு விசாரணை கோரி தாக்கல் செய்த மனுவுக்கு சிபிஐ பதிலளிக்கும் வகையில், இவ்வழக்கு தொடர்பாக வாய்வழி, ஆவணங்கள், அறிவியல் மற்றும் சைபர் தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில் இந்த அறிக்கையை மும்பை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2013, ஜூன் 3ஆம் தேதி ஜூஹு அடுக்குமாடி குடியிருப்பில் ஜியா கான் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்படும் ஜியா கானின் காதலர் நடிகர் சூரஜ் பன்சோலி, ஜியாவுடன் நடத்திய குறுஞ்செய்தி உரையாடலை நீக்கியுள்ளார். சிபிஐ விசாரணையின் போது, கடந்த டிசம்பர் மாதம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் தனது அப்பாவின் சொல்படி குறுஞ்செய்திகளை நீக்கம் செய்ததாக சூரஜ் பன்சோலி தெரிவித்துள்ளார்.

ஜியா கான் மரணத்துக்கு 35நிமிடங்களுக்கு முன்னதாக தான் குடியிருப்புக்கு வந்திருக்கிறார், அதன் பிறகே தற்கொலை கடிதம் எழுதியுள்ளார் என்பதை சிபிஐ உறுதி செய்துள்ளது. சூரஜ்-ஜியா இருவருக்கும் இடையேயான உரையாடல் சுமார் 400 நொடிகள் அதன் பிறகு தான் ஜியா தற்கொலை கடிதம் எழுதியுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இவ்வழக்கின் விசாரணையை வருகிற ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ தரப்பு விளக்கத்தை பரிசீலிக்க ராபியாவின் வக்கீல் அவகாசம் கோரியுள்ளார். மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வரும் தனது மகளை கவனித்துக் கொள்ள ராபியா செல்ல வேண்டும் எனவும் மனுவில் அனுமதி கோரப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்