ஆப்நகரம்

‘ஜோக்கர்’ நாயகிக்கு, ஒளிப்பதிவாளருடன் விரைவில் திருமணம்!

‘ஜோக்கர்’ பட நாயகி காயத்ரிக்கும், ஒளிப்பதிவாளர் ஜீவன்ராஜ் என்பவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.

Samayam Tamil 6 Apr 2018, 7:12 pm
‘ஜோக்கர்’ பட நாயகி காயத்ரிக்கும், ஒளிப்பதிவாளர் ஜீவன்ராஜ் என்பவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.
Samayam Tamil gayathri


தமிழில் ‘ஜோக்கர்’ படத்தில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி கிருஷ்ணன். இவர் இந்தப் படத்துக்கு முன் மலையாளத்தில் ஒரு சில படங்களில் ஹீரோயினியாக நடித்துள்ளார். இவருக்கு நடிப்பை விட நடனத்தில்தான் அதிக ஆர்வம். ஆகையால் அவர் பல நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இதையடுத்து, விஜய் சேதுபதி தயாரித்துள்ள ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ படத்தில் நடித்துள்ளார்.

தற்போது நடிகை காயத்ரி கிருஷ்ணனுக்கும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் ஜீவன்ராஜ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணம் பற்றி நடிகை காயத்ரி கூறுகையில், ‘‘கடந்த 2ம் தேதி எனக்கும், ஜீவன்ராஜுக்கும் இருவீட்டுப் பெற்றோர்கள் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அடுத்த ஆண்டு எங்களின் திருமணம் நடைபெறவுள்ளது’’ என்றார் காயத்ரி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்