ஆப்நகரம்

பிரபல நடிகையை குடிபோதையில் துரத்தி துரத்தி அடித்த பிரபல நடிகர் கைது!

பிரபல பெங்காலி நடிகர் ஜாய்குமார் முகர்ஜி, தன் காதலியான நடிகை சயந்திகாவை குடிபோதையில் துரத்தி துரத்தி அடித்துள்ளதாக கூறி அவரை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 9 Jul 2018, 6:07 pm
பிரபல பெங்காலி நடிகர் ஜாய்குமார் முகர்ஜி, தன் காதலியான நடிகை சயந்திகாவை குடிபோதையில் துரத்தி துரத்தி அடித்துள்ளதாக கூறி அவரை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil joy kumar


‘தி பைனல் மிஷன்’ என்ற பெங்காலி படத்தின் மூலம் பிரபலமானவர்கள் நடிகர் ஜாய்குமார் முகர்ஜி மற்றும் நடிகை சயந்திகா. இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அண்மையில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவியது. இதனால் பிரிந்தனர். அதையடுத்து இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படம் ‘உமா’. இந்தப் படம் சமீபத்தில் வெளியாகி ஹிட்டானது. இதனால் ஜாய்குமார் சயந்திகாவுடன் மீண்டும் சேர்ந்து வாழ நினைத்தார். அதற்காக நடிகையிடம் சமாதானமாக பேசியுள்ளார். ஆனால், நடிகை சயந்திகா சம்மதிக்கவில்லை. காரணம் அவர் இன்னொருவரை காதலித்து வந்தார்.

இதனால் கோபமடைந்த ஜாய்குமார் மது அருந்திவிட்டு போதையில் சயந்திகாவின் வீட்டிற்கு சென்று தன்னுடன் சேர்ந்து வாழ அழைத்துள்ளார். இதற்கு நடிகை மறுப்பு தெரிவித்தார். இதனால் கடும் கோபமடைந்த ஜாய்குமார், சயந்திகாவை சரமாரியாக அடித்துள்ளார். இதனையடுத்து நடிகை சயந்திகாவின் மேனேஜர் போலீசில் புகார் செய்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடிகர் ஜாய்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், நடிகர் ஜாய்குமார் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்