ஆப்நகரம்

#BiggBossTamil பிக் பாஸ் போட்டியாளர் அறிமுகம் : ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கவனம் ஈர்த்த ஜூலி!

தை புரட்சி என கருதப்படும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கவனம் ஈர்த்த ஜூலியானாவும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார்.

TOI Contributor 28 Jun 2017, 9:07 pm
தை புரட்சி என கருதப்படும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கவனம் ஈர்த்த ஜூலியானாவும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார்.
Samayam Tamil juliana in big boss season 1
#BiggBossTamil பிக் பாஸ் போட்டியாளர் அறிமுகம் : ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கவனம் ஈர்த்த ஜூலி!


ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கு பெற்ற ஜூலியானா 1992ஆம் ஆண்டு பிறந்தவர். தென் தமிழகத்தை சேர்ந்த இவர், நர்ஸாக பணிபுரிந்து வருகிறார். மெரினாவில் நடைபெற்ற பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தை மாணவர்கள் ஒன்று சேர்ந்து வழிநடத்தினர். அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஜூலியானா தனது கோஷம் மூலம் எல்லா மக்களையும் சென்றடைந்தார்.

ஜூலியானாவின் கோஷம் வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றில் மிகவும் பிரபலம். இதனால் ஒரு வீரமங்கையாகவே அப்போது ஜூலியானா போற்றப்பட்டார். மேலும் இவரை யாரோ கொலை செய்துவிட்டனர் என்றும் வதந்தியை பரப்பினர். ஆனால் செல்ஃபி வீடியோ மூலம் ஜூலி அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

தற்போது திரை பிரபலங்கள் பலருடன் சேர்ந்து ஜூலியானாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். #Juliana! #VivoBiggBoss வீட்டிற்குள் செல்லும் பன்னிரெண்டாவது பங்கேற்பாளர்.. #BiggBossTamil @Vivo_India pic.twitter.com/tyjvShIgBd — Vijay Television (@vijaytelevision) June 25, 2017

அடுத்த செய்தி

டிரெண்டிங்