ஆப்நகரம்

படம் ரெடியாவதற்கு முன்பே மேனேஜரை ரெடி செய்த ஜூலி!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று புகழ்பெற்ற ஜூலி, தற்போது தனது கால்ஷீட்களை கவனித்துக்கொள்ள மேனேஜர் ஒருவரை நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Samayam Tamil 4 Feb 2018, 4:43 pm
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று புகழ்பெற்ற ஜூலி, தற்போது தனது கால்ஷீட்களை கவனித்துக்கொள்ள மேனேஜர் ஒருவரை நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil julie again trolled for appointing manager for handling her call sheets
படம் ரெடியாவதற்கு முன்பே மேனேஜரை ரெடி செய்த ஜூலி!!


கடந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில், கூவி கூவியே பிரபலமானவர் ஜூலி. இந்த அடையாளத்தை வைத்து, விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

ஆனால், அதில் அவரின் உண்மை முகத்தை அறிந்த மக்கள் அவரை வெறுக்கத் தொடங்கினர். இருப்பினும், அவருக்கு உள்ள எதிர்மறையான பிம்பத்தை வைத்தே தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக சேர்ந்துவிட்டார். இது மட்டுமில்லாமல், விமல் நடிப்பில் வெளியான ‘மன்னர் வகையறா’ படத்திலும் ஒரு சிறிய தோற்றத்தில் தோன்றினார்.

இந்நிலையில், ஜூலி முதல்முறையாக ‘உத்தமி’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இதில் இவர் புரட்சி பெண் வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, படத்தின் சூட்டிங் முழுமையாக முடியாத சூழலில், இப்போதே தனது கால்ஷீட்களை கையாள மேனேஜர் ஒருவரை ஜூலி நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்னும் முதல்படமே முழுமையாக முடியாத சூழலில் மேனேஜரை நியமித்த ஜூலியை நெட்டிசன்கள் கழுவி ஊத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்