ஆப்நகரம்

‘ஜூலி 2’ நவம்பர் 10-ல் ரிலீஸ்!

நடிகை ராய்லட்சுமி முதன்முறையாக பாலிவுட்டில் நடித்த படம் ‘ஜூலி 2’ நவம்பர் 10ம் தேதி வெளியாகவுள்ளது.

TNN 20 Oct 2017, 4:27 pm
நடிகை ராய்லட்சுமி முதன்முறையாக பாலிவுட்டில் நடித்த படம் ‘ஜூலி 2’ நவம்பர் 10ம் தேதி வெளியாகவுள்ளது.
Samayam Tamil julie2 movie will release on nov 10
‘ஜூலி 2’ நவம்பர் 10-ல் ரிலீஸ்!


தென்னிந்திய படங்களில் மட்டும் நடித்து வந்த நடிகை ராய் லட்சுமி, பாலிவுட்டில் முதன்முறையாக நடித்த படம் ‘ஜூலி 2’. ஏற்கனவே பாலிவுட்டில், 2004-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த ‘ஜூலி’ படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் வெளியாகவுள்ளது இந்த ‘ஜூலி 2’. இந்தப் படத்தை தீபக் சிவதாஷினி இயக்கியுள்ளார்.

முதல்படத்திலேயே ராய்லட்சுமி அதிகமான கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறார். பிகினி, முத்தக்காட்சி என கவர்ச்சியில் கலக்கியுள்ளார் ராய்லட்சுமி. இப்படம் கடந்த அக்., 6-ம் தேதி ரிலீஸாக வேண்டியது. ஆனால் சில பிரச்னைகளால் படத்தின் ரிலீஸ் கடைசிநேரத்தில் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளார்கள். அதன்படி ‘ஜூலி 2’ வருகிற நவம்பர் 10-ம் தேதி ரிலீஸாக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்