ஆப்நகரம்

பிக்பாஸ் கமல் வழியில் கட்சி தொடங்கிய ஜூனியர் என்.டி.ஆர்.

தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.

TNN 25 Jul 2017, 12:52 am
தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.
Samayam Tamil junior ntr announces political appearance
பிக்பாஸ் கமல் வழியில் கட்சி தொடங்கிய ஜூனியர் என்.டி.ஆர்.


பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழல் நடத்தும் நடிகர் கமல்ஹாசன் அரசியல் பிரச்னைகள் குறித்து கருத்து கூறி பரபரப்பை ஏற்படுத்தி வரும் சூழலில் அவரது ஸ்டைலை தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். பின்பற்றத் தொடங்கிவிட்டார்.

தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஜூனியர் என்.டி.ஆர். சம சமாஜ் கட்சி என்ற அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முழுதும் ஈடுபட்டுள்ளதால், இந்த சீசன் முடிந்ததும் முழுநேரமாக அரசியலில் குதிப்பார் என்று எதிரபார்க்கப்படுகிறது.

விரைவில் அவர் நடித்த ஜெய் லவகுசா படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ஜெய், லவ குமார், குசா ஆகிய மூன்று பாத்திரங்களில் நடித்துள்ளார். இதில், ஜெய் பாத்திரத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்