ஆப்நகரம்

நாம் வாழ தகுதியற்றவர்கள்: 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை பற்றி சினிமா நட்சத்திரங்கள் கோபமான ட்வீட்

7 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது பற்றி தமிழ் சினிமா நட்சத்திரங்கள் கடும் கோபத்துடன் பதிவிட்டுள்ளனர்.

Samayam Tamil 3 Jul 2020, 12:05 pm
புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் 7 வயது ஆகும் சிறுமி ஜெயப்பிரியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை கடந்து கொண்டு சென்று இப்படி செய்த குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Kollywood Celebs react to 7 year old girl raped and murdered


ஏழு வயது குழந்தைக்கு நடந்துள்ள கொடுமை பற்றி தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் அதிர்ச்சியுடன் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளனர்.

மாஸ்டர் படத்தில் பணியாற்றி உள்ள ஆடை பட இயக்குனர் ரத்னா குமார் பதிவிட்டுள்ள ட்விட்டில் "அந்த குழந்த முக கவசம் லாம் போட்டுட்டு சிரிச்சி பேசி விளையாடிட்டு இருந்திருக்கா டா டேய். கெடுத்து கொன்னுட்டீங்களே டா. இப்படி ஒரு கேடுகெட்ட உலகத்துல நான் ரெண்டு பெண் குழந்தைய பெத்து போட்டத நெனச்சாலே நெஞ்சு பதறுது" என தெரிவித்து உள்ளார்.


நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பதிவிட்டுள்ள டுவிடடில், "என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது? மற்றொரு குழந்தை மிகவும் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது தான் நாம் வாழும் உலகம் என்றால், நாம் அனைவரும் கொரோனா வந்து சாக வேண்டியவர்கள் தான். அது தான் மனிதர்களுக்கு கடவுளின் பதிலாக கூட இருக்கலாம். நாம் உயிர் வாழ தகுதியற்றவர்கள்" என வரலக்ஷ்மி குறிப்பிட்டுள்ளார்.

"7 வயது குழந்தையை மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்கிறார்கள். நம்முடைய நீதித் துறை சிஸ்டம் என்ன செய்கிறது. அவர்களை கைது செய்கிறார்கள். ஆனால் எதுவுமே நடப்பதில்லை. நான் முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன், தயவு செய்து பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு, முதல் முறையாக இருந்தாலும், மரண தண்டனை கொடுக்க சட்டம் இயற்றுங்கள். அந்த பயம் இருந்தால் மட்டுமே இவர்கள் நிறுத்துவார்கள். இப்போது செய்வது போல அரஸ்ட் செய்து சிறைக்கு அனுப்பினால், மீண்டும் வெளியில் வந்து அதையே தான் செய்வார்கள்" என வரலட்சுமி கேட்டுக் கொண்டுள்ளார்.



நடிகை சாய் பல்லவி பதிவிட்டுள்ள ட்விட்டில், "நாட்டில் பல குற்ற சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. அவற்றை அறிந்து கொள்ளவே பல ஹேஷ் டாக் பயன்படுத்த வேண்டியுள்ளது என கோபத்துடன் தெரிவித்துள்ளார்.


ராதிகா சரத்குமார் பதிவிட்டுள்ள ட்விட்டில், "இது பற்றி படிக்கும் போது என் நெஞ்சம் வெடிக்கிறது. கண்ணீர் விடாமல் இது பற்றி எழுதக் கூட எனக்கு வலிமை இல்லை. இதை செய்தவர்களை விடவே கூடாது" என தெரிவித்துள்ளார்.


விஷ்ணு விஷால் பேசும்போது, "இதயம் வெடிக்கிறது.. நாம் ஒரு சமுதாயமாக தோல்வி அடைகிறோம்.. மாற வேண்டும்.. பொறுத்தது போதும்" என கோபத்துடன் குறிப்பிட்டுள்ளார்.


அதுல்யா ரவி பேசும் போது, "தமிழ்நாட்டில் இதயத்தை வலிக்க வைக்கும் மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. குழந்தையை இப்படி பாலியல் வன்கொடுமை செய்யும் ஆண்கள் மாறவே மாட்டார்கள். சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவிப்பது இதற்கு தீர்வல்ல. கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும். இல்லை என்றால் இன்று ஜெயப்பிரியா, நாளை அது வேறு ஒருவராக இருக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.


சாக்ஷி அகர்வால் பதிவிட்டு ட்விட்டில், "என் இதயம் வலிக்கிறது. எப்படி சிலர் மனிதத் தன்மையே இல்லாமல் இருக்கிறார்கள். மிகக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். நாட்டில் என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது. ஜெயப்பிரியாவுக்கு நீதி வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்