ஆப்நகரம்

‘காற்றின் மொழி’யுடன் இணையவுள்ள நடிகை ஜோதிகா!

ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கவுள்ள படத்திற்கு ‘காற்றின் மொழி’ என்று பெயர் வைத்துள்ளனர்.

Samayam Tamil 20 Apr 2018, 12:50 pm
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கவுள்ள படத்திற்கு ‘காற்றின் மொழி’ என்று பெயர் வைத்துள்ளனர்.
Samayam Tamil katrin-mozhi


நடிகை ஜோதிகா, ராதாமோகன் இயக்கத்தில் கடைசியாக நடித்த படம் ‘மொழி’. இந்தப் படத்துக்காக இவருக்கு தமிழக அரசின் விருது கிடைத்தது. இந்தப் படத்தை அடுத்து தற்போது ராதா மோகன் இயக்கவுள்ள ‘காற்றின் மொழி’ படத்தில் நடிக்கவுள்ளார் நடிகை ஜோதிகா. இதற்கு முன் ஜோதிகா பாலா இயக்கத்தில் ‘நாச்சியார்’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் ஓரளவு வெற்றிப்பெற்றது.

இந்நிலையில் இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘துமாரி சுலு’ என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய விரும்பினார் ராதாமோகன். இந்தப் படத்தில் ஜோதிகாதான் நடிக்கிறார் என்பதையும் அவர் அறிவித்தார். இந்நிலையில் இயக்குனர் ராதாமோகன், இரண்டு நாட்களுக்கு முன்பு இப்படத்தின் தமிழ் பெயரை கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு நாள் ஜோதிகா வுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து செல்பி எடுத்துக்கொள்ளலாம் என்ற போட்டியை அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் தலைப்புடன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராதாமோகன் படத்திற்கு ‘காற்றின் மொழி’ என்ற பெயரை வைத்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்