ஆப்நகரம்

குஷி 2ம் பாகத்தில் விஜய்யுடன், நடிகை ஜோதிகா!

குஷி படத்தின் 2ம் பாகம் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று நடிகை ஜோதிகா கூறியுள்ளார்.

Samayam Tamil 16 Nov 2018, 2:05 pm
‘குஷி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவானால், அதில் கண்டிப்பாக விஜய்யுடன் நானும் நடிப்பேன் என்று நடிகை ஜோதிகா கூறியுள்ளார்.
Samayam Tamil cats
குஷி 2ம் பாகத்தில் விஜய்யுடன், நடிகை ஜோதிகா!


விஜய் சினிமா பயணத்தில் மறக்கமுடியாத படங்களில் ஒன்று ‘குஷி’. எஸ்.ஜே. சூர்யா இயக்கிய இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்திருந்தார். முழுக்க காதலை கருவாக கொண்ட இப்படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது.

இந்நிலையில் நடிகை ஜோதிகா, ‘காற்றின் மொழி’ படத்தின் புரமோஷன் பணிகளின் போது பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘விஜய்யுடன் நான் நடித்த குஷி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு உருவானால் அதிலும் நான் கட்டாயம் நடிப்பேன். ஆனால் நான் ஏற்கும் கதாபாத்திரம் முதிர்ச்சியுடனும், புத்திசாலித்தனத்துடனும் இருக்க வேண்டும்’’ என்று கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்