ஆப்நகரம்

ஹாலிவுட்டில் படமாக்கப்படும் 'கா-வியன்'

'2எம் சினிமாஸ்' K.V. சபரீஷ் தயாரிப்பில் பார்த்தசாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் 'கா-வியன்' திரைப்படம் சாலையோர திரில்லர் படமாக உருவாகவுள்ளது. அமெரிக்காவின் தலைநகரான லாஸ் வேகாஸ் நகரில் சுமார் 45 நாட்கள் படமாக்கப்படவுள்ளது.

TNN 23 Aug 2016, 3:06 pm

Samayam Tamil ka viyan movie to be shoot in los vegas
ஹாலிவுட்டில் படமாக்கப்படும் 'கா-வியன்'

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவின் "லாஸ் வேகாஸில்" நடைபெற்று வருகிறது. ஷாம் நடிக்கும் படத்தில் 'மனம் கொத்திப் பறவை' புகழ் ஆத்மியா, ஸ்ரீதேவி குமார், ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் ஸ்ரீநாத், ஹாலிவுட் நடிகர் ஜஸ்டின், அலெக்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

மேலும் கோலிவுட் மற்றும் ஹாலிவுட்டை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்ற உள்ளனர். என்.எஸ்.ராஜேஷ் குமார் ஒளிப்பதிவில், நவி சதிஷ்குமார் வசனத்தில், ஷ்யாம் மோகன் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.

சண்டைப்பயிற்சியாளர்களாக ஸ்டன்ட் சிவா, நடன இயக்குநராக விஷ்ணு தேவா, கலை ஜான் பிரிட்டோ, நிர்வாக தயாரிப்பு கணேஷ் குமார் என மிக பிரம்மாண்டமான தொழில்நுட்ப கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளது.

முழுக்க முழுக்க அமெரிக்காவின் "லாஸ் வேகாஸில்" படமாக்கப்படும் முதல் தமிழ் திரைப்படம் இதுவே ஆகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்