ஆப்நகரம்

மெர்சலிடம் தோற்றுபோன ‘காலா’; 24 மணி நேரம் கடந்து சாதனைகள் ஏதும் இல்லை!

24 மணி நேரமாகியும், காலா படம் மெர்சலின் சாதனைகளை மிஞ்ச முடியவில்லை.

Samayam Tamil 3 Mar 2018, 4:26 pm
சென்னை: 24 மணி நேரமாகியும், காலா படம் மெர்சலின் சாதனைகளை மிஞ்ச முடியவில்லை.
Samayam Tamil kaala teaser didnt overtake any of the mersal teaser records
மெர்சலிடம் தோற்றுபோன ‘காலா’; 24 மணி நேரம் கடந்து சாதனைகள் ஏதும் இல்லை!


பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காலா’. இதன் டீசர் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது. இந்த டீசர் யூ-டியூப்பில் புதிய சாதனைகள் படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 24 மணி நேரம் கடந்தும், எந்தவித சாதனைகளையும் படைக்கவில்லை. சாதனைகளின் பட்டியலில் முன்னணியில் இருப்பது விஜய் நடிப்பில் உருவான மெர்சல். இதனை விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

ஒருசமயம் ரஜினி - கமல் என்றிருந்த காலம் போய், தற்போது விஜய் - அஜித் என்ற போட்டி நிலவி வருகிறது. அதுவும் சமூக வலைத்தளங்களில் இருதரப்பு ரசிகர்களுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

இந்த இரு நடிகர்களும் டீசர், டிரைலர் தான் புதிய சாதனைகளை மாறி, மாறி பெற்று வருகிறது. 24 மணி நேரத்தில் மெர்சல் டீசர், 1 கோடியே 12 லட்சம் பார்வைகளும், 7 லட்சத்து 28 ஆயிரம் லைக்குகளும் பெற்றன.

ஆனால் காலா டீசர் 24 மணி நேரத்தில் 87 லட்சம் பார்வைகளும், 3 லட்சத்து 29 ஆயிரம் லைக்குகள் மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kaala teaser didnt overtake any of the Mersal teaser Records.

அடுத்த செய்தி

டிரெண்டிங்