ஆப்நகரம்

‘காளி’ பட டிரைலர் வெளியானது!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘காளி’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

Samayam Tamil 17 Mar 2018, 12:24 pm
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘காளி’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.
Samayam Tamil kaali movie trailer released
‘காளி’ பட டிரைலர் வெளியானது!


விஜய் ஆண்டனி தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காளி’. இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

வித்தியாசமான கதையம்சம் கொண்ட கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி. தனக்கான கதையை மிக கவனத்துடன் தேர்வு செய்து வருகிறார். ‘அண்ணாதுரை’ படத்தை அடுத்து தற்போது ‘காளி’ படத்தில் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இந்தப் படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். ‘வணக்கம் சென்னை’ படத்திற்கு பிறகு இவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.


இந்தப் படத்தில் சுனைனா, அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்