ஆப்நகரம்

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம் கொடுத்த சூர்யா!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கல் சங்க அறக்கட்டளைக்கு நடிகர் சூர்யா ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார்.

Samayam Tamil 10 Oct 2019, 5:48 pm
அண்மையில், சூர்யாவின் நடிப்பில் வெளியான காப்பான் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில், தீபாவளிக்காக, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க அறக்கட்டளைக்கு நடிகர் சூர்யா ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்.
Samayam Tamil Suriya


இதற்கான காசோலையை அறக்கட்டளை செயலாளர் ஆர்.வி.உயக்குமாரிடம் கொடுத்துள்ளார். இதன் மூலம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்களின் குடும்பங்கள் பெரிதும் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுதா கொங்குரா இயக்கத்தில் சூர்யா சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஊர்வசி, கருணாஸ், அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராஃப், மோகன் பாபு, பரேஷ் ராவல் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக, காப்பான் படத்தில் விவசாயம் குறித்து பேசியதற்காக, சூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்