ஆப்நகரம்

பாதி வழி கடந்த 'காற்று வெளியிடை'

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'காற்று வெளியிடை' படத்தின் 55% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

TNN 11 Aug 2016, 5:30 pm
சென்னை: இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'காற்று வெளியிடை' படத்தின் 55% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
Samayam Tamil kaatru veliyidai crosses the halfway mark
பாதி வழி கடந்த 'காற்று வெளியிடை'


ரோஜா, அலைபாயுதே உள்ளிட்ட பல்வேறு சூப்பர் டூப்பர் காதல் ஹிட் பட வரிசையில் உருவாகி வரும் 'காற்று வெளியிடை' படத்தில் கார்த்தி - அதிதி ராவ் ஹிதாரி ஜோடி சேர்ந்து நடித்து வருகின்றனர். இப்படத்தில் முதன் முறையாக தாடியை ஷேவ் செய்து புதிய தோற்றத்தில் நடித்துள்ளார்.

கார்த்தி என்.ஆர்.ஐ விமானியாகவும், அதிதி மருத்துவராகவும் நடித்துள்ளனர். ஊட்டியில் நடந்த முதல்கட்ட படப்பிடிப்பை தொடர்ந்து, சில முக்கிய கட்சிகளை படமாக்க அடுத்த வாரம் படக்குழுவினர் காஷ்மீர் செல்லவுள்ளனர்.

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகும் இபப்டத்தை ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் வழங்குகிறது. இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே நலல் வரவேற்பையும், எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி, மலையாள நடிகை லலிதா, நடன மங்கை ருக்மணி விஜயகுமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், விபின் ஷர்மா உள்ளிட்டோர் யணிந்து நடித்துள்ளனர். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்