ஆப்நகரம்

நெருப்பு டா .. 'கபாலி' டா .. மாஸ் கிளப்பும் கபாலி டீசர்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கபாலி' படத்தின் மாஸ் டீசர் சற்று முன் வெளியானது.

TNN 1 May 2016, 11:31 am
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கபாலி' படத்தின் மாஸ் டீசர் சற்று முன் வெளியானது.
Samayam Tamil kabali teaser unvieled
நெருப்பு டா .. 'கபாலி' டா .. மாஸ் கிளப்பும் கபாலி டீசர்


'மெட்ராஸ்' புகழ் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கபாலி' படத்தின் அதிரி புதிரி கிளாஸான டீசர் ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. ஸ்டைல் மன்னன் சூப்பர்ஸ்டாரின் எதார்த்தமான கெத்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.



இதனை இயக்குனர் மற்றும் கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இன்ப நாளிது, இனிய நாளிது! The wait is over. Presenting you #Thalaivar @superstarrajini and @beemji 's #KabaliTeaserhttps://t.co/jnzIMFek1T — Kalaippuli S Thanu (@theVcreations) May 1, 2016 பெரும் மகிழ்ச்சி!!!!கபாலிhttps://t.co/qE6AEwXpzH — pa.ranjith (@beemji) May 1, 2016 இப்படத்தின் போஸ்டர்கள், டீசர் என அனைத்தும் படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றதுடன் எதிர்ப்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. முதல் பார்வை போஸ்டர் முதல் டீசர் வரை இணையத்தில் வெளியான சில வினாடிகளில் 'கபாலி' மாஸ் ஹிட் அடித்து வருகிறார்.

டீசர் வெளியீடு குறித்து தகவல் வெளியானதில் இருந்து சமூக வலைதளங்களில் கபாலி ஹெஷ்டேக் போட்டு இணையத்தை ரசிகர்கள் திணறடித்து வருகின்றனர்.

கலைப்புலி.எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசான், தினேஷ், உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணனின் கெத்தான பின்னணி இசையில் 'கபாலி' க்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. இப்படத்தில் சூப்பர்ஸ்டார் மலேசிய வாழ் நிழலுலக தாதாவாக நடித்திருக்கிறார். இப்படம் ரஜினிகாந்த் நடிக்கும் இரண்டாவது நிழலுக தாதா பற்றிய கேங்க்ஸ்டர் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்