ஆப்நகரம்

‘கபாலி’ டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது!

ரஜினி நடித்த ‘கபாலி’ படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளது.

TNN 15 Jul 2016, 7:13 pm
ரஜினி நடித்த ‘கபாலி’ படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளது.
Samayam Tamil kabali tickets sold out with in few minutes
‘கபாலி’ டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது!


ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் உலகமெங்கும் வருகிற ஜுலை 22-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் டிக்கெட்டுகள் வெளிநாடுகளில் விநியோகிக்கப்பட்டு, பரபரப்பாக விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில், சென்னையில் எப்போது ‘கபாலி’ படத்தின் டிக்கெட் விற்பனை தொடங்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

இந்நிலையில், இன்று சென்னையின் பிரபல எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனம் ‘கபாலி’ படத்தின் டிக்கெட் முன்பதிவை இன்று தொடங்கியது. தொடங்கப்பட்ட சில நிமிடங்களில் முதல்நாள் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. அடுத்தடுத்த நாட்களுக்கும் தொடர்ந்து டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்