ஆப்நகரம்

நடிகைகளுடன் தாத்தா புகைப்படங்கள்: வாலிபர்களின் வில்லங்கத்தனம்!!

கடலூர் மாவட்டத்தில் வில்லங்கமாக ஆண் முதியவர்களின் புகைப்படத்தை நடிகைகளின் படத்துடன் இணைத்து ஜோடி, ஜோடியாக போஸ்டர் அடித்து அதற்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் என பெயரிட்டு இருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

Samayam Tamil 28 Apr 2018, 1:02 pm
கடலூர் மாவட்டத்தில் வில்லங்கமாக ஆண் முதியவர்களின் புகைப்படத்தை நடிகைகளின் படத்துடன் இணைத்து ஜோடி, ஜோடியாக போஸ்டர் அடித்து அதற்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் என பெயரிட்டு இருப்பது தற்போது வைரலாகி வருகிறது.
Samayam Tamil நடிகைகளுடன் தாத்தா புகைப்படங்கள்
நடிகைகளுடன் தாத்தா புகைப்படங்கள்


பொதுவாக தமிழகத்தில் நடிகைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கும், அவர்கள் எங்காவது நிகழ்ச்சிக்காக வெளியே வந்தாலும் அந்த இடத்தில் கூட்டம் கூடிவிடும். முண்டி அடித்துக் கொண்டு சென்று புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள்.

தங்களுடைய கனவுக் கன்னியாக இருப்பவர்களை பார்க்க மாட்டோமா என்று ஏங்கும் ரசிகர்களும் உண்டு. சினிமாக்களில் நடிகைகளைப் பார்த்து ஜொல்லுவிடும் தாத்தா கேரக்டர்களையும் படத்தில் காட்சியாக வைப்பது உண்டு. அப்படித்தான் கடலூரில், தாத்தாக்களை நடிகைகளின் படத்துடன் இணைத்து, ஜோடியாக வைத்து பேனராக வைத்துள்ளனர். இது அந்தப் பகுதியில் செல்வரின் கண்களை உறுத்தி வருகிறது. இந்த பேனருக்கு ''வருத்தப்படாத வாலிபர் சங்கம்'' என்றும் பெயரிட்டு வில்லங்கத்தனம் செய்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்