ஆப்நகரம்

'கடவுள் இருக்கான் குமாரு' படத்துக்கான தடை நீக்கம்

இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'கடவுள் இருக்கான் குமாரு' படத்துக்கு விதித்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது

TNN 9 Nov 2016, 3:35 pm
சென்னை: இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'கடவுள் இருக்கான் குமாரு' படத்துக்கு விதித்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil kadavul irukkaan kumaru interim ban released hc
'கடவுள் இருக்கான் குமாரு' படத்துக்கான தடை நீக்கம்


லிங்கா' படத்தினால் ஏற்பட்ட ரூ.65 லட்சம் நஷ்டத்தை தர வேண்டும் என தயாரிப்பாளர் டி.சிவா மீது மெரீனா பிக்சர்ஸ் உரிமையாளர் சிங்காரவேலன் தொடர்ந்த வழக்கில், டி.சிவாவின் அம்மா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், ரூ.35 லட்சத்தை வைப்புத் தொகையாக செலுத்த தயாரிப்பளர் டி.சிவா ஒப்புதல் அளித்ததையடுத்து, 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தின் மீதான தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.

மேலும், தயாரிப்பாளர் சிவாவின் உறுதியை ஏற்று, 4 வாரத்திற்குள் பணத்தை செலுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து திட்டமிட்டப்படி உலகம் முழுவதும் நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தணிக்கையில் 'யு' சான்றிதழ் பெற்ற இப்படத்துக்கு தடைவிதிக்கப்பட்டதால் படக்குழுவினர் சோகத்தில் உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்