ஆப்நகரம்

தமிழகத்தில் கைதி படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

கைதி படத்தின் முதல் நாள் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 26 Oct 2019, 12:16 pm
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கைதி படம் நேற்று பிகில் படத்துடன் வெளியானது. படத்தை கண்ட பலரும் பாசிட்டிவான விமர்சனத்தை கூறுகின்றனர்.
Samayam Tamil kaithi


இந்த நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கைதி தமிழகத்தில் மட்டும் ரூ. 5 கோடி வசூல் செய்துள்ளது. அது மட்டுமின்றி சென்னையில் மட்டும் முதல் நாள் 40 லட்சம் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கிருஷ்ணகிரி வன்முறையில் ஈடுபட்டது யார் என்பது நமக்கே தெரியும்.. கஸ்தூரி!

இது விஜயின் பிகில் படத்துடன் வெளியானதால் தான் வசூலில் சற்று பின்னடைந்துள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் விமர்சன ரீதியாக கைதி நல்ல வரவேற்பை பெற்று வருவதால் கண்டிப்பாக வரும் நாளில் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் 2: 85 வயது மூதாட்டியாக நடிக்கும் காஜல் அகர்வால்!

தமிழகத்தில் மட்டும் சுமார் 300 தியேட்டர்களில் கைதி ரிலீசாகியுள்ளது. பெரும்பாலான திரையரங்கில் பிகில் படம் வெளியாகியுள்ளதால் தான் கைதிக்குக் குறைவான திரையரங்கம் கிடைத்துள்ளது. இருப்பினும் கைதி படம் ஹவுஸ் புல் ஷோவ்வாக ஓடிக்கொண்டு வருகிறது.

கைதி படம் ஒரே இரவில், நான்கு மணி நேரத்தில் நடப்பது போல் உருவாகியுள்ளது. கார்த்தி கேரியரில் கைதி படம் ஒரு மிக பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லலாம். மேலும் என்ன தான் தமிழ் ராக்கர்ஸ் படத்தை லீக் செய்தலும் கைதி படத்தை திரையரங்கத்திற்குச் சென்று தான் பார்ப்போம் என்று ஒரு ரசிகர் பட்டாளம் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்