ஆப்நகரம்

திருமணமான நடிகைகள் ஏன் ஒதுக்குகிறீர்கள்? -காஜல் அகர்வால் முன்னெச்சரிக்கை பேச்சு

ஒரு பெண் திருமணமான பின்பும் வேலைக்கு செல்வது போல தான் நடிகையும். நடிகைகளை மட்டும் திருமணமான பின்பு ஒதுக்கப்படுவது மிகவும் வேதனையளிக்கின்றது என காஜல் அகர்வால் ஆவேசமாக பேசியுள்ளார்.

TNN 3 Feb 2017, 1:15 pm
ஒரு பெண் திருமணமான பின்பும் வேலைக்கு செல்வது போல தான் நடிகையும். நடிகைகளை மட்டும் திருமணமான பின்பு ஒதுக்கப்படுவது மிகவும் வேதனையளிக்கின்றது என காஜல் அகர்வால் ஆவேசமாக பேசியுள்ளார்.
Samayam Tamil kajal agarwal angrily married actresses avoided
திருமணமான நடிகைகள் ஏன் ஒதுக்குகிறீர்கள்? -காஜல் அகர்வால் முன்னெச்சரிக்கை பேச்சு

நடிகைகளுக்கு 30 வயது ஆகிவிட்டால் போதும் உங்களுக்கு எப்போது திருமணம் என நச்சரிக்க ஆரம்பித்து விடுகின்றனர். சினிமாவுக்கும், திருமணத்திற்கு என்ன தொடர்பு உள்ளது. ஒரு சாதாரண பெண் திருமணத்திற்கு முன் எப்படி வேலைக்கு செல்கின்றாலோ அதேபோல், திருமணமான பின்பும் வேலைக்கு செல்கின்றாள். ஆனா அவர் மீது யாரும் எதுவும் கூறுவதில்லை.

ஆனால் நடிகைகளுக்கு அப்படி இல்லை திருமணமான பின் அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஆனால் ஆண்களுக்கு எந்த வயதாக இருந்தாலும் வாய்ப்பு மறுக்கப்படுவதில்லை.

நடிகைகளின் மார்க்கெட்டை குறைப்பதற்காக எப்போது திருமணம் என குடைசல் கொடுப்பது மிகவும் வருத்தமளிக்கின்றது. நான் திருமணம் செய்துகொள்ள இன்னும் பல ஆண்டுகள் உள்ளது. அதோடு நான் நடிகையாக எட்டவேண்டிய இலக்கு பல உள்ளது.அதோடு மனதுக்கு பிடித்த பையனும் கிடைக்க வேண்டும்.”
இவ்வாறு காஜல் அகவர்வால் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்