ஆப்நகரம்

காஜல் அகர்வாலுக்கு பிடித்தது விஜய்யின் ‘துப்பாக்கி’!

விஜய் நடித்த படங்களில் நடிகை காஜல் அகர்வாலுக்கு பிடித்தது ‘துப்பாக்கி’ என்று தெரிவித்துள்ளார்.

TOI Contributor 21 Jun 2017, 5:10 pm
விஜய் நடித்த படங்களில் நடிகை காஜல் அகர்வாலுக்கு பிடித்தது ‘துப்பாக்கி’ என்று தெரிவித்துள்ளார்.
Samayam Tamil kajal agarwal lkes thuppaakki film
காஜல் அகர்வாலுக்கு பிடித்தது விஜய்யின் ‘துப்பாக்கி’!


நடிகை காஜல் அகர்வால் நேற்று முன்தினம், தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்போது, ரசிகர்களின் கேள்விக்கு சமூக வலைதளங்களில் பதிலளித்து வந்தார் காஜல். விஜய்யுடன் ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’, ‘விஜய் 61’ என மூன்று படங்களில் நடித்துள்ளார் காஜல். இதில், எந்தப் படம் உங்களுடைய பேவரிட் என்று ரசிகர் ஒருவர் கேட்டு இருந்தார்.

அதற்கு காஜல், “மூன்று படங்களிலேயே ‘துப்பாக்கி’ தான் எனக்குப் பிடிக்கும். ஏனென்றால், அது ஏ.ஆர்.முருகதாஸ் சார் படம். என் மனதுக்கு நெருக்கமானது” என்று பதிலளித்துள்ளார் காஜல். விஜய்யின் அடுத்த படத்தையும் இயக்கப் போவது ஏ.ஆர்.முருகதாஸ்தான் என்பது முடிவாகிவிட்டது. அதற்காக காஜல் அகர்வால் இப்போதே இயக்குனருக்கும், விஜய்க்கும் ஐஸ் வைப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.

Kajal Agarwal lkes Thuppaakki film!!

அடுத்த செய்தி

டிரெண்டிங்