ஆப்நகரம்

என் வயதை குறைக்க மாட்டேன்... கூட்டிச் சொல்வேன்....: காஜல் அகர்வால்!

நான் வயதைப் பற்றி கவலைப்படவில்லை, மாறாக கூடுதலாக சொல்வதால் அனுபவம் இருப்பதாக உணர்கிறேன்' என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால்.

Samayam Tamil 24 Feb 2019, 2:45 pm

ஹைலைட்ஸ்:

  • எந்த துறையில் உள்ள பெண்களும், வயதை கேட்டால் சொல்ல தயங்குவார்கள். கதாநாயகிகள் சொல்வதே இல்லை.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Kajal Agarwal
சென்னை: நான் வயதைப் பற்றி கவலைப்படவில்லை, மாறாக கூடுதலாக சொல்வதால் அனுபவம் இருப்பதாக உணர்கிறேன்' என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் சொந்தமாக பட தயாரிப்பு கம்பெனி ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதற்கு ‘கா மூவீஸ்’ என பெயரிட்டுள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் காஜல் அகர்வாலே நாயகியாக நடிக்க உள்ளார். தெலுங்கு இயக்குனரான பிரசாந்த் வர்மா இந்த படத்தை இயக்க உள்ளார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இந்த படம் உருவாக உள்ளது. கடந்தாண்டு தெலுங்கில் வெளிவந்த ‘ஆவ்’ படத்தை இயக்கியவர் பிரசாந்த் வர்மா. அந்தப் படத்தின் நாயகியாக நடித்திருந்தார் காஜல் அகர்வால். 'இந்தியன் 2' படத்தில் கமலுக்கு ஜோடியான தற்போது காஜல் அகர்வால். தவிர, இரு தமிழ் படங்கள் ஒரு தெலுங்கு படம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதுகுறித்து காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில், ‘எந்த துறையில் உள்ள பெண்களும், வயதை கேட்டால் சொல்ல தயங்குவார்கள். கதாநாயகிகள் சொல்வதே இல்லை. என் உண்மையான வயதை சொல்ல தயங்க மாட்டேன். நடிகைகள் திரையில், தங்களை குறைந்த வயது பெண்ணாக காட்டிக்கொள்ள படாதபாடுபடுகின்றனர். என் வயதை பத்து ஆண்டுகள் அதிகமாக சொல்வேன். சினிமாவில் நிறைய அனுபவம் எனக்கு கிடைத்துள்ளது.’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்