ஆப்நகரம்

ஒரே நாளில் இரு படங்கள் ரிலீஸ்: குழப்பத்தில் காஜல் ரசிகர்கள்!

காஜல் அகர்வால் நடித்த இரு படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் அவரது ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

TNN 24 Jul 2017, 4:42 pm
காஜல் அகர்வால் நடித்த இரு படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் அவரது ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.
Samayam Tamil kajal agarwals two movies release at a same time
ஒரே நாளில் இரு படங்கள் ரிலீஸ்: குழப்பத்தில் காஜல் ரசிகர்கள்!


காஜல் அகர்வால், அஜீத்துடன் நடித்த ‘விவேகம்’ படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகிறது. அதேபோல் அதேநாளில் காஜல் அகர்வால் ராணாவுடன் இணைந்து நடித்த ‘நேனே ராஜா நேனே மந்திரி’ என்ற தெலுங்கு படமும் வெளியாகவுள்ளது.

ஆனால் தற்போது ஒரே நாளில் காஜல் அகர்வால் நடித்த இரண்டு படம் வெளியானால் தெலுங்கு காஜல் ரசிகர்கள் எந்த படத்தை முதலில் பார்ப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேனே ராஜா நேனே மந்திரி’ படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க அப்படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

தெலுங்கில் அஜீத்தை விட ராணாவுக்கு அதிக மார்க்கெட் இருந்தாலும் ‘விவேகம்‘ படத்திற்கு மிக அதிகப்படியான எதிர்பார்ப்பு இருப்பதால் ‘நேனே ராஜா நேனே மந்திரி’ ரிலீஸ் தேதியில் மாற்றம் இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்