ஆப்நகரம்

இளம் ஹீரோ ஒருவருடன் டேட்டிங் செல்லும் காஜல் அகர்வால்!

காஜல் அகர்வால்! இளம் ஹீரோ ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 28 Feb 2018, 5:19 pm
காஜல் அகர்வால்! இளம் ஹீரோ ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
Samayam Tamil kajal aggarwal fall in love
இளம் ஹீரோ ஒருவருடன் டேட்டிங் செல்லும் காஜல் அகர்வால்!


தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இவரது தங்கை நிஷா அகர்வாலும் ஒரு நடிகை. அவர் காஜலைப்போல சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை. ஆகையால் நிஷா தனது காதலனை கரம்பிடித்து குடும்பத்துடன் செட்டிலானார்.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் மும்பை தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது. சினிமாவில் தனக்கு இன்னும் மார்க்கெட் நீடிப்பதால் திருமணத்தை தள்ளிப்போட்டு வருகிறார். இந்நிலையில் இளம் ஹீரோ ஒருவருடன் காஜல் அடிக்கடி டேட்டிங் செய்கிறார் என்று கிசுகிசு பரவியது. அவருடன் பல்வேறு ஊர்களுக்கு காஜல் சுற்றுவதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி காஜல் கூறுகையில் .‘‘எனது தனிப்பட்ட வாழ்க்கைபற்றி பேச மாட்டேன். யாருடனும் நான் டேட்டிங் செய்யவில்லை. எனக்கு ஏற்ற பொருத்தமான நபரை கண்டால் பிறகு அதுபற்றி அனைவருக்கும் தெரிவிக்கிறேன்’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்