ஆப்நகரம்

அஜீத்துடன் போட்டி போட தயாராகும் காஜல்!

அஜீத்துடன் போட்டி போட்டு நடிக்க காஜல் அகர்வால் தன் உடம்பை ஏற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

TNN 4 Aug 2016, 3:11 pm
அஜீத்துடன் போட்டி போட்டு நடிக்க காஜல் அகர்வால் தன் உடம்பை ஏற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
Samayam Tamil kajal get ready for ajith movie
அஜீத்துடன் போட்டி போட தயாராகும் காஜல்!


நடிகை காஜல் அகர்வாலுக்கு, அஜீத்துடன் நடிக்கும் வாய்ப்பு திடீரென தேடி வரும் என எதிர்பார்க்கவில்லை. சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்திற்கு முதலில் கதாநாயகியாக பேசப்பட்டவர் அனுஷ்கா தான். அவர் ‘பாகுபலி’, ‘பாகுமதி’ படங்களில் பிஸியாக இருப்பதால் அந்த வாய்ப்பு காஜலுக்கு போயிருக்கிறது.

காஜலுக்கு சில ஆண்டுகளாக தென் இந்திய மொழிகளில் வாய்ப்புகள் குறைந்துவிட்டன. இதனால் இந்தி பக்கம் போன காஜல் அங்கிருக்கும் ரசிகர்கள் விருப்பத்திற்கேற்ப தனது உடலை ஒல்லியாக்கிவிட்டார். தமிழ் சினிமாவில் இங்கிருப்பவர்கள் ஏன் உடம்பு சரியில்லையா? என்று விசாரிக்கும் அளவுக்கு இளைத்து போயிருந்தார் காஜல். தற்போது அஜீத்துக்கு ஜோடி என்றதும் உடம்பை கொஞ்சம் ஏற்றத் தொடங்கியிருக்கிறாராம்.


அஜீத் வெளிநாடு கிளம்பும்போதே காஜலும் கிளம்பிவிட்டார். திரும்பி வரும்போது உடம்பில் சதை பிடிப்புடன்தான் வருவார் என்று தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்