ஆப்நகரம்

காக்கா முட்டை பாய்ஸ் என்ன இப்படி மாறிட்டாங்க.. லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்

காக்கா முட்டை படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

Samayam Tamil 1 Jun 2020, 4:36 pm
எம். மணிகண்டன் இயக்கத்தில் 2014ல் வெளிவந்த படம் காக்கா முட்டை. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்த அந்த படத்தை தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். படத்தில் ஐஸ்வர்யாவின் மகன்களாக விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் நடித்து இருந்தனர்.
Samayam Tamil Kaaka Muttai


பெரிய அளவில் வரவேற்பை பெற்ற இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. குழந்தை நட்சத்திரங்களாக நடித்த விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கும் தேசிய விருது கிடைத்தது. சிறந்த குழந்தைகள் படம் மற்றும் சிறந்த குழந்தை நடிகர்கள் ஆகிய இரண்டு தேசிய விருதும் காக்கா முட்டை படத்திற்கு கிடைத்தது.

காக்கா முட்டை வந்து ஆறு வருடங்கள் ஆகி விட்ட நிலையில் அதில் நடித்த விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் தற்போது வளர்ந்து அவர்களது தோற்றமே மாறிவிட்டது. மிக ஸ்டைலான தோற்றத்தில் அவர்கள் இருக்கும் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி கொண்டிருக்கிறது.

சின்ன காக்க முட்டை மற்றும் பெரிய காக்கா முட்டையா இது என பலருக்கும் ஆச்சர்யம் ஏற்படுத்தியுள்ளது. வைரால்கும் அந்த புகைப்படம் இதோ..


சென்னையில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு சேரி பகுதியில் வாழ்ந்து வரும் இரண்டு குழந்தைகள் பற்றியது தான் மொத்த காக்கா முட்டை படமும். மிக ஏழ்மையான நிலையில் இருக்கும் அவர்களுக்கு பிசா சாப்பிடும் ஆசை வந்தபோது, அதற்காக அவர்கள் செய்யும் விஷயங்களை தான் முழு படமும் காட்டும்.

அவர்கள் வழக்கமாக விளையாடும் ஒரு இடத்தில் இருக்கும் மரத்தில் இருக்கும் கூட்டில் இருந்து காக்கா முட்டைகளை திருடி இவர்கள் குடிப்பது வழக்கம். கோழி முட்டை வாங்க காசு இல்லாத நிலையில் இருப்பவர்கள் இப்படி காக்கா முட்டையை எடுத்து குடித்து தங்கள் உடலுக்கான புரத தேவையை எடுத்துக் கொள்கின்றனர்.

ஆனால் ஒரு சமயத்தில் அந்த இடத்தில் இருக்கும் மரத்தை வெட்டிவிட்டு ஒரு பீசா கடையை அங்கு கட்டிவிடுகின்றனர். திறப்பு விழாவில் அந்த கடைக்கு சிம்பு வந்து பீசா சாப்பிடுவார். அதனால் அந்த பீசாவை எப்படியாவது சாப்பிட்டாக வேண்டும் என்கிற ஆசையில் பல விஷயங்களை செய்கின்றனர். ரயிலில் இருந்து கீழே விழும் கரியை எடுத்து சில ரூபாய்கள் சம்பாதிக்கும் அவர்கள் பீசா வாங்க காசு சம்பாதித்தார்களா என்பதை தான் காக்கா முட்டை படம் காட்டியிருக்கும். கூடவே இந்த சமூகத்தில் இருக்கும் அரசியல் உட்பட பல விஷயங்களியும் படம் பேசி இருக்கும்.

இதில் மிக எதார்த்தமாக விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் நடித்து இருந்தனர். தற்போது அவர்கள் தாடி, மீசை வைத்து அடையாளமே தெரியாத அளவுக்கு வளர்த்துள்ளனர்.

காக்கா முட்டை படத்திற்கு பிறகு விக்னேஷ் மட்டும் சமுத்திரக்கனி நடித்த அப்பா என்கிற படத்தில் நடித்து இருந்தார். அதன்பின் நயன்தாராவின் அறம் படத்திலும் நடித்து இருந்தார்.

ஆனால் ரமேஷ் மறுபுறம் சினிமாவில் இருந்து ஒதுங்கி தனது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர்கள் இருவரும் ஸ்டைலான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி உள்ளதால் விரைவில் மீண்டும் சினிமாவில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்