ஆப்நகரம்

‘சங்கமித்ரா’ படத்துக்கு முன் ‘கலகலப்பு 2’ தொடங்கவுள்ளது!

சுந்தர் சி. இயக்கவிருக்கும் ‘சங்கமித்ரா’ படத்துக்குப் முன் ‘கலகலப்பு 2’ படம் தொடங்கப்படவுள்ளது.

TNN 25 Sep 2017, 5:02 pm
சுந்தர் சி. இயக்கவிருக்கும் ‘சங்கமித்ரா’ படத்துக்குப் முன் ‘கலகலப்பு 2’ படம் தொடங்கப்படவுள்ளது.
Samayam Tamil kalakalappu 2 movie will start first sangamithra will next
‘சங்கமித்ரா’ படத்துக்கு முன் ‘கலகலப்பு 2’ தொடங்கவுள்ளது!


‘சங்கமித்ரா’ பிரமாண்ட படத்தை சுந்தர்.சி இயக்கவிருந்த நிலையில், சுருதி ஹாசன் படத்தில் இருந்து வெளியேறியதால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது சுருதிஹாசன் இடத்தை நடிகை திஷா பதானி நிரப்பியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் ‘கலகலப்பு’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை முக்கால்வாசி சுந்தர் சி. எழுதியுள்ளார். மேலும் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகளின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி ‘கலகலப்பு-2’ படத்தில் ஜீவா, ஜெய், கேத்தரின் தெரசா, நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தை சுந்தர்.சி-யின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அவ்னி மூவிஸ் தயாரிக்க இருக்கிறது. ‘கலகலப்பு-2’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்க இருப்பதாக குஷ்பு சுந்தர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்