ஆப்நகரம்

Sivakarthikeyan Upcoming Movie: கலாநிதி மாறனின் அடுத்த டார்க்கெட் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயனின் 16 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Samayam Tamil 8 Mar 2019, 3:47 pm
சிவகார்த்திகேயனின் 16 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Samayam Tamil remo.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சீமராஜா படத்தைத் தொடர்ந்து வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் மிஸ்டர் லோக்கல். இந்த நிலையில், அடுத்து இவரது 16ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது.

இயக்குனர் பாண்டிராஜ் – கார்த்தி கூட்டணியில் கடைக்குட்டி சிங்கம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து கார்த்தி அல்லது சூர்யா அல்லது இருவரையும் சேர்த்து ஒரு படம் பண்ணலாம் என்று பாண்டிராஜ் திட்டமிட்டிருந்தார். ஆனால், கார்த்தியின் தேவ் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து படம் பண்ண தயாராகியுள்ளார். சிவகார்த்திகேயனை மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்தவரே பாண்டிராஜ் தான். இப்படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.

தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது என்று கலாநிதி மாறன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மற்ற நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்