ஆப்நகரம்

களவாணி 2 படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டாா் மாதவன்

களவாணி 2 படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகா் மாதவன் தனது ட்விட்டா் பக்கத்தில் இன்று மாலை வெளியிட்டாா்.

Samayam Tamil 30 Jun 2018, 7:13 pm
களவாணி 2 படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகா் மாதவன் தனது ட்விட்டா் பக்கத்தில் இன்று மாலை வெளியிட்டாா்.
Samayam Tamil Kalavani 2


சற்குணம் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான படம் களவாணி. விமல், ஓவியா நாயகன், நாயகியாக இந்த படத்தில் நடித்தனா். சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, இளவரசு, சூரி, திருமுருகன் ஆகியோா் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனா்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு எஸ்.எஸ்.குமரன் இசையமைத்திருந்தாா். ராஜா முகமது படத்தொகுப்பாளராகப் பணியாற்றினாா். ரொமாண்டிக் காமெடி வகையைச் சோ்ந்த இந்தப் படம் ரசிகா்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. விமல், ஓவியாவே மீண்டும் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை சற்குணமே தயாரித்தும் இருக்கிறாா். முதல் பாகம் படம்பிடிக்கப்பட்ட பகுதிகளிலேயே இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது.


படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டரை மாதவன் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ளாா். விரைவில் இசை வெளியிடப்படும் என்று பா்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்