ஆப்நகரம்

ஒரு டிக்கெட்டுக்கு ஒரு லுங்கி இலவசம்: "களவாணி சிறுக்கி"யின் தந்திரம்!

‘களவாணி சிறுக்கி’ படத்தின் ஒரு டிக்கெட்டுக்கு ஒரு லுங்கி இலவசம் என படத்தின் தயாரிப்பாளர் புது வியாபார யுக்தியை கையாண்டுள்ளார்.

Samayam Tamil 20 Sep 2018, 4:12 pm
‘களவாணி சிறுக்கி’ படத்தின் ஒரு டிக்கெட்டுக்கு ஒரு லுங்கி இலவசம் என படத்தின் தயாரிப்பாளர் புது வியாபார யுக்தியை கையாண்டுள்ளார்.
Samayam Tamil kalavi sirukki


புதுமுகங்கள் சாமி, திவாகர், அஞ்சு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘களவாணி சிறுக்கி’. மேலும் இவர்களுடன் திவாகர், சங்கர் கணேஷ், கௌரி சங்கர், தமீம், நமச்சிவாயம் , கருப்பையா, மாரியம்மாள், பிரேமலதா, வடிவேல் சுதா, தீபா, மீனா. உட்பட பலர் நடித்துள்னர். இந்தப் படத்தை ரவி ராகுல் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு தருண் ஆன்டனி இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ராணா கிரியேஷன்ஸ் சார்பில் ஆர்.நமச்சிவாயம் தயாரித்துள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

திரையரங்குகளில் தற்போது ரசிகர்கள் கூட்டம் குறைந்து கொண்டு வருவதை பார்த்த இந்தப் படத்தின் தயாரிப்பாளர் நமச்சிவாயம், புதிதாக ஒன்றை யோசித்தார். அது என்னவென்றால் படம் வெளியாகும் 5, 6, 7 ஆகிய தேதிகளில் காலை காட்சிக்கு மட்டும் திரைக்கு வரும் ரசிகர்களுக்கு ஒரு டிக்கெட்க்கு ஒரு விலையுயர்ந்த 143 பிராண்ட் லுங்கி ஒன்றை பரிசாக தர திட்டமிட்டுள்ளார்.

இதன் மூலம் ரசிகர்களும் திரைக்கு வருவார்கள் படமும் வெற்றிபெறும் என்கிறார் தயாரிப்பாளர் ஆர்.நமச்சிவாயம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்